சர்ச்சில் பிரதர்ஸ் அணி வெற்றி: 'ஐ-லீக்' கால்பந்தில்

கோவா: 'ஐ-லீக்' கால்பந்து போட்டியில் சர்ச்சில் பிரதர்ஸ் அணி 3-1 என, ராஜஸ்தானை வென்றது.
இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் 'ஐ-லீக்' தொடர் நடத்தப்படுகிறது. நேற்று, கோவாவில் நடந்த லீக் போட்டியில் சர்ச்சில் பிரதர்ஸ், ராஜஸ்தான் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய சர்ச்சில் பிரதர்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சர்ச்சில் பிரதர்ஸ் அணிக்கு டிரைஜாய் சவியோ தியாஸ் (27, 63வது நிமிடம்), ஸ்டென்ட்லி பெர்ணான்டஸ் (84வது) கைகொடுத்தனர். ராஜஸ்தான் அணி சார்பில் பெக்துார் (78வது) ஒரு கோல் அடித்தார்.
இதுவரை விளையாடிய 17 போட்டியில், 9 வெற்றி, 4 'டிரா', 4 தோல்வி என 31 புள்ளிகளுடன் சர்ச்சில் பிரதர்ஸ் அணி முதலிடத்துக்கு முன்னேறியது. இன்டர் காஷி அணி (31 புள்ளி) 2வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 24 புள்ளிகளுடன் (6 வெற்றி, 6 'டிரா', 5 தோல்வி) 5வது இடத்தில் உள்ளது.
மேலும்
-
முன்னாள் எம்.எல்.ஏ., மீதான வழக்கை 6 மாதத்தில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு
-
கோவில் நிரந்தர பணியாளர்களை அரசு ஊழியராக மாற்ற கோரிக்கை
-
எல்லையில் அத்துமீறிய கடத்தல் கும்பல்; துப்பாக்கிச்சூட்டில் வங்கதேச நபர் பலி
-
இன்று இனிதாக (02.03.2025)
-
லயோலா, எம்.ஓ.பி.வைஷ்ணவா 'ஒலிம்பியாட்' ஹாக்கியில் அபாரம்
-
பவித்சிங் கோப்பை 'டி - 20' குருநானக் கல்லுாரி வெற்றி