திருத்தணி முருகன் கோவிலில் நாளை பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருத்தணி,திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. 12 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தினமும் ஒரு வாகனத்தில் காலை - மாலை என, இருவேளைகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

அந்த வகையில், இந்தாண்டின் பிரம்மோற்சவ விழா இன்று இரவு விநாயகர் திருவீதியுலாவுடன் துவங்குகிறது. நாளை காலை 8:30 - -9:30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.

வரும், 9ம் தேதி தேர் திருவிழாவும், 10ம் தேதி வள்ளி திருமணம், 12ம் தேதி கொடி இறக்கம், தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Advertisement