உலகளாவிய அணுகல் தன்மை வழிகாட்டுதல் பயிற்சி

திருவள்ளூர், திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான, உலகளாவிய அணுகல் தன்மை வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடந்தது.

திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு துறை பொறியாளர், அலுவலர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகளுக்கு உலகளாவிய அணுகல் தன்மை வழிகாட்டுதல்கள் குறித்த பயிற்சி நேற்று நடந்தது. பொதுப்பணி துறை செயற்பொறியளார் தேவன், பயிற்சியாளர் சுல்தான் காதர் ஆகியோர் பயிற்சி விளக்கம் அளித்தனர்.

பயிற்சியில் அவர்கள் கூறியதாவது:

தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமைகள் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு அங்கமாக, அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டடம், பொது இடங்கள், சுற்றுலா, ஆன்மிக தலங்கள் மற்றும் வியாபார அங்காடிகளில் மாற்றுத்திறனாளிகள் தங்கு தடையின்றி எளிதில் சென்று வரும் வகையில் பாதை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement