காணாமல் போன காவலாளி சடலமாக மீட்பு

உத்திரமேரூர், உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, பருத்திக்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன், 54; தனியார் தொழிற்சாலை காவலாளி. இவர், நேற்றுமுன்தினம், இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை.

பல்வேறு இடங்களில் ஆனந்தனை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை, அதே பகுதியில் உள்ள தனியார் விவசாய கிணற்றில், ஆனந்தன் இறந்த நிலையில் கிடந்தார்.

உத்திரமேரூர் போலீசார் ஆனந்தன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement