பறவை மோதி தீப்பிடித்த விமானம்
வாஷிங்டன், அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள நியூவார்க்கில் இருந்து, இண்டியானா போலிஸ் மாகாணத்திற்கு நேற்று 'பெட்எக்ஸ்' நிறுவனத்தின் சரக்கு விமானம் புறப்பட்டது.
வானில் பறக்கத் துவங்கிய சில நிமிடங்களிலேயே அதன் வலதுபுற இன்ஜினில் பெரிய பறவை மோதியது.
இதனால் அந்த இன்ஜினில் தீப்பற்றியது. விமானத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் மற்றும் மூன்று விமான ஊழியர்கள் இருந்தனர்.
தீ பற்றியதை அறிந்த விமானி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து உடனடியாக தரையிறங்க அனுமதி கோரினார்.
அனுமதி கிடைத்ததும் விமானம் தரையிறங்கியது. தரையிறங்கும் வரை இன்ஜினில் பற்றிய தீ அணையாமல் கொழுந்துவிட்டு எரிந்தது. விமானம் தரையிறங்கியதும், ஓடுபாதை அருகே தயார் நிலையில் இருந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போதைப்பொருள் அச்சுறுத்தல் தீவிரம்: விழிப்புணர்வு தேவை என்கிறார் சசி தரூர்
-
திண்டுக்கல் பெருமாள் கோவிலில் சுவாமி சிலைகள் உடைப்பு
-
தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை
-
குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!
-
பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!
-
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் சமூக அநீதி; அன்புமணி கண்டனம்
Advertisement
Advertisement