மானசரோவர், முக்திநாத் செல்லும் புனித யாத்ரீகர்களுக்கு மானியம்
சென்னை,சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய தலங்களுக்கு புனித யாத்திரை செல்வோருக்கு, மானியம் வழங்கும் திட்டத்தை, அறநிலையத் துறை ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, மானசரோவர், முக்திநாத் ஆகிய தலங்களுக்கு, மார்ச் 31ம் தேதி வரை புனித யாத்திரை மேற்கொள்வோர், தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
மானசரோவர் பயணித்தோருக்கு, தலா 50,000 ரூபாயும், முக்திநாத் பயணித்தோருக்கு, தலா 20,000 ரூபாயும் அரசு மானியமாக வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்கள், 500க்கு மேல் வந்தால், தகுதி, குறைந்த வருமானம் அடிப்படையில், பயனாளிகள், அரசின் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படுவர்.
முதல் முறையாக மானசரோவர், முக்திநாத் பயணிப்போருக்கு மட்டுமே இந்த மானியம் வழங்கப்படும். தகுதியான நபர்கள், அறநிலையத்துறை இணைய தளமான www.tnhrce.gov.inல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உரிய சான்றுகள் இணைப்புடன், ஆணையர், ஹிந்து சமய அறநிலையத் துறை, எண்: 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 34 என்ற முகவரிக்கு, ஏப்., 30ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும் என, அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
மேலும்
-
பறவை மோதி தீப்பிடித்த விமானம்
-
'அரசியல் காரணங்களுக்காக கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு'
-
சசி தரூர் செயல்பாடுகள் ராகுல் கடும் எச்சரிக்கை
-
கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் சகோதரர் மகனை நீக்கினார் மாயாவதி அரசியல் வாரிசே தேவையில்லை என ஆவேசம்
-
பொலிவியாவில் பஸ் விபத்து 37 பேர் பலி
-
பேச்சில் உடன்பாடு ஏற்படாததால்3ம் நாளாக போராட்டம் நீடிப்பு