லயோலா, எம்.ஓ.பி.வைஷ்ணவா 'ஒலிம்பியாட்' ஹாக்கியில் அபாரம்

சென்னை, அரும்பாக்கம், டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரி சார்பில், 'ஒலிம்பியாட்' எனும் தலைப்பில், கல்லுாரிகளுக்கு இடையிலான மாநில விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.

இதில், வாலிபால் மற்றும் கூடைப்பந்து போட்டிகள், அரும்பாக்கம் கல்லுாரி வளாகத்திலும், ஹாக்கி போட்டி எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கிலும் நடக்கின்றன.

ஹாக்கியில், பெண்களில் நான்கு அணிகளும், ஆண்களில் எட்டு அணிகளும் பங்கேற்று மோதின. நேற்று நடந்த பெண்களுக்கான இறுதிப் போட்டியில், சென்னை எம்.ஓ.பி.வைஷ்ணவா மற்றும் சேலம் பத்மவாணி கல்லுாரி அணிகள் எதிர்கொண்டன.

விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில், எம்.ஓ.பி.வைஷ்ணவா, 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

அணியின் வீராங்கனை கிருபா 14வது நிமிடத்திலும், விஜயலட்சுமி 24வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர்.

ஆண்களுக்கான போட்டியில், லயோலா கல்லுாரி, 7 - 0 என்ற கோல் கணக்கில், மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியை தோற்கடித்து முதலிடத்தை பிடித்தது.

Advertisement