குழந்தைகள் மையத்தை பராமரிக்க அறிவுறுத்தல்


குழந்தைகள் மையத்தை பராமரிக்க அறிவுறுத்தல்


கிருஷ்ணகிரி: சூளகிரி ஊராட்சி ஒன்றியம் பாத்தகோட்டா கிராமத்திலுள்ள குழந்தைகள் மையம், காமன்தொட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடை, அட்டக்குறிக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். பீர்ஜேப்பள்ளி ஊராட்சி பாத்தக்கோட்டா கிராமத்திலுள்ள குழந்தைகள் மையத்தை பார்வையிட்டு, குழந்தைகளின் வருகை பதிவேடு, எடை, உயரம், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவு மாதிரிகள் ஆகியவற்றை பார்வையிட்டார். குழந்தைகள் மையம் மற்றும் கழிப்பறை ஆகியவற்றை துாய்மையாக பராமரிக்க அங்கன்வாடி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
ஓசூர், சப் கலெக்டர் பிரியங்கா, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் இந்திரா, பி.டி.ஓ., ராஜேஷ், தாசில்தார் மோகன்தாஸ், ஆர்.ஐ., ரத்தினகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement