ஈச்சமர சாலை சந்திப்பில்நாய் கடிக்கு ஆளாகும் மக்கள்


ஈச்சமர சாலை சந்திப்பில்நாய் கடிக்கு ஆளாகும் மக்கள்


பனமரத்துப்பட்டி:ஈச்சமர சாலை சந்திப்பில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித் திரிவதோடு கடிப்பதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்தின் முக்கிய பகுதியாக, ஈச்சமரம் பிள்ளையார் கோவில் உள்ளது. அங்கு காளியாகோவில்புதுார் சாலை, 14வது வார்டு சாலை, அங்கண்ணன் தெரு சாலை, பழநி ஆண்டவர் கோவில் சாலைகள் சேர்கின்றன.
எந்த நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள நிலையில், அங்கு, 50க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. பள்ளி, கடைகளுக்கு செல்லும் சிறுவர், சிறுமியரை விரட்டி கடிக்கின்றன. அதிகாலை, மாலையில் நடைப்பயிற்சிக்கு செல்லும் முதியோர், நாய் கடிக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் அசம்பாவிதம் ஏற்படும் முன், தெருநாய்களை கட்டுப்படுத்த டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள்
வலியுறுத்தினர்.

Advertisement