பார்லி.,கூட்டத்தொடரில் பங்கேற்க அப்துல் ரஷீத் டில்லி கோர்ட்டில் மனு

1

புதுடில்லி: வரும் பார்லி., கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி கோரி சிறையில் உள்ள லோக்சபா எம்.பி., அப்துல் ரஷீத் டில்லி கோர்ட்டில் மனு செய்துள்ளார்.

காஷ்மீரைச் சேர்ந்தவர் இன்ஜினியர் ரஷீத் எனப்படும் அப்துல் ரஷீத் இவர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டியதாக 2019-ல் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் உள்ளார்.
நடந்துமுடிந்த 2024 லோக்சபா தேர்தலில் காஷ்மீரின் பாராமுல்லா லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா போட்டியிட்டார்.
இதில் அப்துல் ரஷீத் வெற்றி பெற்று லோக்சபா எம்.பி.யாக தேர்வு பெற்றார். கடந்தாண்டு பரோலில் வெளியே வந்து எம்பி.யாக பதவியேற்றார்.

இந்நிலையில் வரும் பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் 10ம் தேதி முதல் துவங்கி, ஏப்ரல் 4 வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வேண்டி டில்லி கோர்ட்டில் கடந்த பிப்ரவரி27-ல் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ரஷீத் மனுவுக்கு என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி வரும் 5 ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

Advertisement