செப்டிக் டேங்கில் மூழ்கி இருவர் பலி; இருவருக்கு 2 ஆண்டுகள் சிறை
சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே பெட்ரோல் பங்க் செப்டிக் டேங்கில் மூழ்கி இருவர் பலியான வழக்கில் உரிமையாளர், மேனேஜர் ஆகிய இருவருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சாத்துார் சார்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் மைக்கேல் அமல்தாஸ் 48. சாத்துார் அருகே நள்ளியிலுள்ள அவரின் பெட்ரோல் பங்க் செப்டிக் டேங்கை 2014 ஜுன் 19 ல் கோவில்பட்டி ஆவல்நத்தத்தைச் சேர்ந்த ராஜ் 22, மாடசாமி 28, ஆகியோர் சுத்தம் செய்ய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இறங்கிய போது விஷவாயுத்தாக்கி பலியாகினர்.
இவ்வழக்கில் மைக்கேல் அமல்தாஸ், மேனேஜர் கோவில்பட்டி இலுப்பையூரணி மார்ட்டின் ஜார்ஜ் 45, ஆகியோர் மீது வழக்குப்பதிந்து தாலுகா போலீசார் விசாரித்தனர்.
இவ்வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி முத்து மகாராஜா குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் முருகன் ஆஜரானார்.
மேலும்
-
தந்தையை கொன்ற கொடூர மகன்: வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பிய கல்நெஞ்சம்
-
டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு ஆலையை துாத்துக்குடி அல்லது ஓசூருக்கு ஈர்க்க முயற்சி
-
உங்கள் அனைத்து தகவல்களையும் திருட முடியும்! பெண்களே... ஜாக்கிரதை; சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
-
டில்லியில் இரு கோஷ்டிகள் இடையே துப்பாக்கிச்சூடு! பீதியில் ஓடிய மக்கள்
-
தேர்தல் கமிஷன் தவறை திருத்த 24 மணி நேர கெடு விதித்த மம்தா!
-
அமித் ஷாவுடன் சந்திப்பு; கட்சியினருக்கு அதிர்ச்சி கொடுத்த 'கோவை மாஜி'