கல்லுாரி மாணவி தற்கொலை
கடலுார் : கல்லுாரி மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த அதியமான்குப்பத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் மகள் மதியரசி,18; இவர், கடலுாரில் சக மாணவிகளுடன் வீடு எடுத்து தங்கி, தனியார் கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று உடன் இருந்த மாணவிகள் கல்லுாரிக்கு சென்ற நிலையில், மதியரசி மட்டும் அறையில் தனியாக இருந்தார். அப்போது, துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கடலுார், புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement