பெட்ரோல் கேனுடன் வந்த மூதாட்டியால் பரபரப்பு



நாமக்கல்: திருச்செங்கோடு அடுத்த கொன்னையாறு பகுதியை சேர்ந்த பெருமாள் மனைவி வசந்தா, 65; இவர், நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது, நுழைவு வாயிலில் இருந்த போலீசார், அவர் பையை சோதனை செய்தனர். அதில், பெட்ரோல் நிரப்பிய கேன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பெட்ரோல் கேனை பறிமுதல் செய்த போலீசார், மூதாட்டி வசந்தாவிடம் விசாரித்தனர்.


அப்போது அவர், 'தான் தங்கி இருக்கும் வீட்டிற்கு நீண்ட நாட்க-ளாக, பட்டா கேட்டு மனு அளித்தும், நடவடிக்கையும் இல்லை. அதனால், பெட்ரோல் கேனுடன் கலெக்டர் அலுவலகம் வந்தேன்' என, தெரிவித்தார். அவருக்கு, போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்-பட்டது.

Advertisement