தி.மு.க.,- எம்.எல்.ஏ., சகோதரர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் தாலுகா, தாப்பாத்தி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து, 46. ஓட்டப்பிடாரம், சிலோன் காலனியில் இவருக்கு சொந்தமான விவசாய நிலம், 'அமோசா' சோலார் நிறுவனத்திற்கு சொந்தமானது எனக்கூறி சிலர் அளவீடு செய்துள்ளனர்.
எதிர்ப்பு தெரிவித்த மாரிமுத்துவை தாக்கியதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அமோசா சோலார் நிறுவனத்திற்கு நிலத்தை கொடுக்காவிட்டால், கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளனர். மாரிமுத்து ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரித்த போலீசார், தி.மு.க.,வை சேர்ந்த ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ., சண்முகையாவின் சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன், 61, சென்னை, ஆவடியை சேர்ந்த அமோசா சோலார் நிறுவன மேலாளர் சீனிவாசன், 43, ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த துரை, 42, தினேஷ்குமார், 38, சிவகாசியை சேர்ந்த கணேஷ், 39 உட்பட 8 பேர் மீது நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.
ஆயுதம் ஏந்தி தாக்குதல், காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக பேசுதல், அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்தல், சட்டவிரோதமாக செயல்படுதல் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு ஆலையை துாத்துக்குடி அல்லது ஓசூருக்கு ஈர்க்க முயற்சி
-
டில்லியில் இரு கோஷ்டிகள் இடையே துப்பாக்கிச்சூடு! பீதியில் ஓடிய மக்கள்
-
தேர்தல் கமிஷன் தவறை திருத்த 24 மணி நேர கெடு விதித்த மம்தா!
-
அமித் ஷாவுடன் சந்திப்பு; கட்சியினருக்கு அதிர்ச்சி கொடுத்த 'கோவை மாஜி'
-
'தமிழ் தெம்பு' ஈஷா நடத்தும் தமிழர் பண்பாட்டு திருவிழா!
-
பள்ளி மாணவர்கள் மொபைல் போன் எடுத்து வருவதை தடை செய்யக் கூடாது: டில்லி ஐகோர்ட்