4 நாட்களுக்கு வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்

சென்னை : 'தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், தென்மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், கோழிப்போர்விளை பகுதியில் அதிகபட்சமாக, 15 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
தென்காசி மாவட்டம் கடனா அணை, 13; திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, 12; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, 11; திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, 10; கன்னியாகுமரி மாவட்டம் அணைகெடங்கு, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சியில் தலா, 9; கன்னியாகுமரி மாம்பழதுறையாறு, திருநெல்வேலி மாஞ்சோலை தலா, 8 செ.மீ., மழை பெய்துள்ளது.
மன்னார்வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதனால், 9ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை காணப்படும். அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில், அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். காலை வேளையில் லேசான பனி மூட்டம் நிலவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலுாரை அடுத்த திருப்பத்துாரில், நடப்பு ஆண்டில் முதல் முறையாக நேற்று, 102 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 30.8 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இது இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதல் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்
-
டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு ஆலையை துாத்துக்குடி அல்லது ஓசூருக்கு ஈர்க்க முயற்சி
-
டில்லியில் இரு கோஷ்டிகள் இடையே துப்பாக்கிச்சூடு! பீதியில் ஓடிய மக்கள்
-
தேர்தல் கமிஷன் தவறை திருத்த 24 மணி நேர கெடு விதித்த மம்தா!
-
அமித் ஷாவுடன் சந்திப்பு; கட்சியினருக்கு அதிர்ச்சி கொடுத்த 'கோவை மாஜி'
-
'தமிழ் தெம்பு' ஈஷா நடத்தும் தமிழர் பண்பாட்டு திருவிழா!
-
பள்ளி மாணவர்கள் மொபைல் போன் எடுத்து வருவதை தடை செய்யக் கூடாது: டில்லி ஐகோர்ட்