மோசடி குறித்து புகார் அளிக்கலாம்

மதுரை: மதுரை சிந்தாமணியில் கட்டி வரும் 'சாந்தி மல்டி ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனையில் முதலீடு செய்தால் 36 சதவீதம் வட்டி தருவதாக கூறி தும்முசின்னம்பட்டி டாக்டர் பூர்ணசந்திரன், மனோரஞ்சிதம், கீதா, ஷீபா, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அருப்புக்கோட்டை பானுமதி உள்ளிட்டோரிடம் ரூ.பல லட்சம் மோசடி செய்தனர்.

இதுதொடர்பாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். முதலீடு செய்து ஏமாந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் தபால்தந்தி நகரில் உள்ள போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்யலாம் அல்லது 0452 - 256 2626ல் தொடர்பு கொள்ளலாம் என டி.எஸ்.பி., சங்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement