வாயால் வடை சுடுகிறார்... சீமானை கடுமையாக விமர்சித்த மார்க்சிஸ்ட்

சென்னை; நுணலும் தம் வாயால் கெடும் என்பதை தமது பேட்டிகள் மூலம் சீமான் நிரூபித்துக் கொள்வதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி உள்ளதாவது;
நுணலும் தம் வாயால் கெடும் என்று சொல்வார்கள். சீமான் அவருடைய வாயாலே கெடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது அவரின் ஏராளமான பேட்டிகள், மேடை பேச்சுகள் எல்லாம் உதாரணம்.
பிரச்னைகளை பட்டியலிட்டு இதில் எல்லாம் கம்யூனிஸ்டுகள் என்ன செய்தார்கள் என்று அவர் கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கிறார். அவர் பட்டியலிட்ட எல்லா பிரச்னைகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கள போராட்டத்தில் நின்று பலவற்றில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதை என்னால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும்.
இந்த போராட்டங்கள் நடைபெற்ற காலம் முழுவதும் சீமான் கருத்து கந்தசாமியாகவும், வாயால் வடை சுடுகிற வேலைகளை மட்டும் செய்து கொண்டாரே தவிர, அவர் கள போராட்டத்துக்கு என்றைக்குமே வந்தது இல்லை சம்பந்தப்பட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருக்கிற மக்கள் இதை அறிவார்கள்.
அதனால் கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்களா என சீமான் போன்றவர்கள் சான்றிதழ் வழங்க வேண்டிய அவசியமில்லை. கம்யூனிஸ்டுகள் என்றாலே அவர்கள் போராட்டக்காரர்கள் என்று தான் நாடு முழுவதும் உள்ள மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசி உள்ளார்.










மேலும்
-
நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: போலி நிருபர்கள் 8 பேர் கைது
-
வைகுண்டர் கருத்துகளைப் பின்பற்றி ஏற்றத்தாழ்வற்ற அமைதியான சமுதாயத்தை உருவாக்குவோம்; அண்ணாமலை
-
கனடா, சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி: டிரம்ப் அறிவிப்பு அமல்
-
மஹா., அமைச்சர் தனஞ்ஜெய் முண்டே திடீர் ராஜினாமா!
-
3ம் மொழி கற்கும் வாய்ப்பை மறுப்பது ஏன்: கனிமொழிக்கு அண்ணாமலை கேள்வி
-
சி.ஏ., தேர்வு முடிவு வெளியீடு; 23,861 பேர் தேர்ச்சி