அகவிலைப்படி நிலுவை ஓய்வூதியர் வலியுறுத்தல்

மதுரை: மதுரையில் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் எச்.எம்.எஸ்., சங்கக் கூட்டம் தலைவர் அங்குசாமி தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் கண்ணன், ஒச்சாதேவன், சவுந்தரராஜன், சேதுராமன், சுந்தரராஜன் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஷாஜஹான் தீர்மானங்களை விளக்கினார்.

தேர்தலில் அளித்த வாக்குறுதியான பழைய பென்ஷன் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். ஓய்வு தினத்தன்றே அனைத்து பணபலன்களையும் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகையை 3 தவணைகளாக பிரித்து மார்ச், ஏப்ரல், மே மாத பென்ஷனில் சேர்த்து வழங்க வேண்டும்.

சிறப்பு மருத்துவ காப்பீடு திட்டத்தை சுகாதாரத் துறை மூலம் விரிவுபடுத்தி செயல்படுத்த வேண்டும். 70 வயதை தாண்டியவர்களுக்கு 10 சதவீத உயர்வு, 80 வயதை தாண்டியவர்களுக்கு 15 சதவீத உயர்வு வழங்க வேண்டும். 15வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றினர்.

Advertisement