மாவட்ட கிரிக்கெட் போட்டி ஹரிவர்ணா அணி வெற்றி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி இணைந்து நடத்தும் செயின்ட் பீட்டர்ஸ் கோப்பைக்கான மாவட்ட அளவிலான டி20 கிரிக்கெட் போட்டியில் ஹரிவர்ணா அணி வெற்றி பெற்றது.

போட்டிகள் பி.எஸ்.என்.ஏ., ஆர்.வி.எஸ்., மற்றும் ரிச்மேன் மைதானங்களில் நடந்தது.

நத்தம் என்.பி.ஆர்., குழுமம் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 99/9. அருண்குமார் 47, சந்துரு 3 விக்கெட். சேசிங் செய்த திண்டுக்கல் ஹரிவர்ணா சிசி அணி 12.5 ஓவர்களில் 100/4 எடுத்து வென்றது.

திண்டுக்கல் மன்சூர் சிசி அணி முதலில் பேட்டிங் செய்து 11 ஓவர்களில் 58 க்கு ஆல்அவுட் ஆனது. பாலகிருஷ்ணன் 3 விக்கெட். சேசிங் செய்த வெற்றி சிசி அணி 8.1 ஓவர்களில் 62/1 எடுத்து வென்றது. பெரியசாமி 37(நாட்அவுட்).

திண்டுக்கல் ஆரஞ்ச் சிசி அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 136/6. ஜெயகாந்தன் 40(நாட்அவுட்). சேசிங் செய்த விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 13.4 ஓவர்களில் 142/3 எடுத்து வென்றது.

ஆசிக் 48(நாட்அவுட், கார்த்திக்சரண் 41(நாட்அவுட்). திண்டுக்கல் சச்சின் சிசி அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 132/8. தினேஷ்குமார் 33, கார்த்திகேயன் 3 விக்கெட். சேசிங் செய்த ஒட்டன்சத்திரம் நைக் சிசி அணி 18.3 ஓவர்களில் 122 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது.

அருண்நிஷாந்த் 53, மருதுபாண்டி 4, தினேஷ்குமார் 3 விக்கெட். கொடைரோடு கொடை சிசி அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 215/5. மனோஜ்குமார் 48, வினோத்கண்ணன் 41. சேசிங் செய்த நல்லாம்பட்டி யங்ஸ்டர்ஸ் சிசி அணி 20 ஓவர்களில் 131/8 எடுத்து தோற்றது. திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் ஜூனியர்ஸ் சிசி அணி 20 ஓவர்களில் 228/5. ெஹமந்த் 92, பிரதீப் 3 விக்கெட். சேசிங் செய்த ஏஞ்சல்காஸ்டர் சிசி அணி 18.4 ஓவர்களில் 53க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. மாதேஸ்வனர் 3 விக்கெட்.

தலா 3 வெற்றிகளுடன் கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் அணி, விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப், விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் ஜூனியர்ஸ் மற்றும் ஹரிவர்ணா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.

Advertisement