'மும்மொழி கொள்கை திணிக்கப் படவில்லை'

பெ.நா.பாளையம் : 'மும்மொழி கொள்கை திணிக்கப்படவில்லை' என, ஐ.ஜே.கே., மாநில தலைவர் ரவி பச்சமுத்து பேசினார்.


கோவை சரவணம்பட்டி, துடியலூர் ரோட்டில் உள்ள ஆலம் தோட்டத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் (ஐ.ஜே.கே.,) கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.


இதில், மாநில தலைவர் ரவி பச்சமுத்து தலைமை வகித்து பேசுகையில், ''தமிழகத்தில் மும்மொழி கொள்கை திணிக்கப்படவில்லை. தமிழ் மொழியின் மீது பிரதமருக்கு பற்று இருப்பதால், அவருக்கு செல்லும் இடமெல்லாம் ஆதரவு பெருகி வருகிறது. கள் விடுதலை இயக்கத்துக்கு ஐ.ஜே.கே., ஆதரவு அளிக்கும். வரும் சட்டமன்ற தேர்தலுக்கான களப்பணிகளை இப்போதே துவங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளோம்'' என்றார்.


ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் லீமா ரோஸ் மார்டின், மாநில நிர்வாகிகள் ஆனந்த முருகன், முத்தமிழ்ச்செல்வன், உதயசூரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement