மாநில செஸ் போட்டி

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பொறியியல் கல்லுாரியில் முதல் முறையாக மாநில அளவில் நடந்த செஸ் போட்டியை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். வயதின் அடிப்படையில் 9,12, 15 ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.

வெற்றி பெற்றவர்களுக்கு 120 கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது. திருச்சி, மதுரை, தேனி, கரூர், கோவை, திருப்பூர், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 15 மாவட்டங்களிலிருந்து 250 பேர் பங்கேற்றனர். கல்லுாரி துணை சேர்மன் மைக்கேல் குமார், கல்லுாரி முதல்வர் பரிமளா கீதா, தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் பாலு பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை மாநில சதுரங்க நடுவர், கான்பிடன்ட் செஸ் அகாடமி செயலாளர் சண்முககுமார் செய்தார்.

Advertisement