போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது

2


தேனி: அரசு வேலை வாங்கித் தருவதாக போலி பணி ஆணை வழங்கி மோசடி செய்த ஒப்பந்ததாரர் சசிக்குமார், 34, அனன்யா, 37, ஆகிய இருவரை தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

எப்படியும் அரசு வேலை பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்தில் முயற்சி செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்திக் கொண்டு பணம் சம்பாதிக்க திட்டம் போடும் மோசடிப் பேர்வழிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அந்தவகையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவரிடம் மோசடி நடந்துள்ளது.



இது குறித்து அந்த நபர் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கம்பத்தை சேர்ந்த நபரிடம் ரூ.13.08 லட்சம் பெற்று போலி பணி ஆணை வழங்கி சோசடி செய்தது தெரியவந்தது. அந்தப் பணி நியமன ஆணையுடன் குறிப்பிட்டு அலுவலகம் சென்றபோதுதான், மோசடியில் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.



இதையடுத்து பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் அளித்தார். விசாரித்த தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், மோசடி செய்த ஒப்பந்ததாரர் சசிக்குமார், 34, அனன்யா, 37, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Advertisement