கோவில்களுக்கு எந்த ஜாதியும் உரிமை கோர முடியாது: சென்னை ஐகோர்ட்

சென்னை: '' கோவில்களுக்கு எந்த ஜாதியும் உரிமை கோர முடியாது ,'' என சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.
நாமக்கல்லில் ஒரே நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மூன்று கோவில்களில் ஒரு கோவிலை தனியாக பிரிக்கக் கோரி கணேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் நீதிபதி பரத சக்கரவர்த்தி விசாரித்தார்.
அப்போது, ஜாதியை நிலைநிறுத்தக்கூடிய வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க முடியாது எனக்கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் அவர், கோவில் அனைவருக்கும் பொதுவானது. அனைத்து பக்தர்களும் நிர்வகிக்கலாம். வழிபடலாம். ஜாதி என்பது மதத்தின் பிரிவு அல்ல. ஜாதி பாகுபாட்டில் நம்பிக்கைக் கொண்டவர்கள் மத போர்வையில் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள். பிரிவினைக்கான மைதானமாக கோவிலை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான பொதுக்கோவில்கள் குறிப்பிட்ட ஜாதியினரின் கோவில்கள் என முத்திரை குத்துகின்றனர். எந்த கோவிலுக்கும் எந்த ஜாதியும் உரிமை கோர முடியாது. கோவில் ஜாதி அடிப்படையில் நிர்வகிப்பது மத நடைமுறையும் அல்ல எனவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.






மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி : பைனலுக்கு இந்திய அணி தகுதி
-
லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்: ரசிகர்களுக்கு நடிகை நயன்தாரா வேண்டுகோள்
-
சாதிக்குமா தென் ஆப்ரிக்கா * அரையிறுதியில் நியூசிலாந்துடன் மோதல்
-
'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்பது பேச்சுக்கு மட்டும்தானா ஆங்கிலத்தில் வெளியாகும் அரசாணைகள்
-
ரோகித்திற்கு கவாஸ்கர் ஆதரவு
-
டில்லியில் உலக செஸ் * 23 ஆண்டுக்குப் பின்...