சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: ஆஸி.,யை வீழ்த்தியது இந்தியா

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு இந்திய அணி தகுதி பெற்றது. இன்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியவை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன.
இன்று (மார்ச் 04) நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியா அணியும் மோதின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரராக களமிறங்கிய கூப்பர் கோன்னலே ரன் எடுக்காமல் அவுட்டானார். பிறகு டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்து ரன்களை சேர்த்தனர்.
டிராவிஸ் ஹெட் 39 ரன்கள் எடுத்து இருந்த போது வருண் பந்தில் அவுட்டானார். பிறகு ஸ்மித்தும், லபுஸ்சங்கேவும் ரன்களை சேர்க்க துவங்கினர். ஆனால், லபுஸ்சங்கே 29, இங்கிலீஸ் 11 ரன்களில் அவுட்டானார்கள். அதிரடியாக விளையாடிய கேப்டன் ஸ்மித்தும் 73 ரன்களுக்கு அவுட்டானார். மேக்ஸ்வெல் 7 , பென் துவார்சுஹூயுஸ் 19, ரன்களில் அவுட்டானார். அலெக்ஸ் கரே 61 ரன்களில் ரன் அவுட் ஆனார். இறுதியில் ஆஸி., அணி 49.3 ஓவரில் 264 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணியின் முகமது ஷமி 3, வருண், ரவிந்திர ஜடேஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இதன் பிறகு 265 வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு இந்த முறையும் துவக்கம் சரியாக அமையவில்லை. சுப்மன் கில் 8 ரன்னில் அவுட்டானார். கேப்டன் ரோகித் சர்மாவுடன் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா 28 ரன்னில் அவுட்டானார்.
தொடர்ந்து கோஹ்லியும், ஸ்ரேயாஸ் ஐயரும் ஜோடி சேர்ந்து மெதுவாக ரன்களை சேர்த்தனர். ஸ்ரேயாஸ் 45 ரன்னில் அவுட்டானார். அக்சர் படேல் 27 ரன்களில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி 84 ரன்களில் அவுட்டானார். அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா 28 ரன்னில் அவுட்டானார்.
48.1 ஓவரில் 267 ரன்கள் எடுத்து இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் வரும் 9 ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி : ஆஸி.,யை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது இந்திய அணி
-
லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்: ரசிகர்களுக்கு நடிகை நயன்தாரா வேண்டுகோள்
-
சாதிக்குமா தென் ஆப்ரிக்கா * அரையிறுதியில் நியூசிலாந்துடன் மோதல்
-
'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்பது பேச்சுக்கு மட்டும்தானா ஆங்கிலத்தில் வெளியாகும் அரசாணைகள்
-
ரோகித்திற்கு கவாஸ்கர் ஆதரவு
-
டில்லியில் உலக செஸ் * 23 ஆண்டுக்குப் பின்...