நகராட்சி தலைவியின் வளையலை உருவ முயன்ற திமுக கவுன்சிலர்: வீடியோ வைரல்

குன்னூர்: குன்னூரில் நகராட்சி தலைவியின் வளையலை தி.மு.க., கவுன்சிலர் உருவ முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுதும் தி.மு.க.,வினர் உறுதிமொழி எடுத்து வருகின்றனர். அதேபோல், நீலகிரி மாவட்டம் குன்னூரிலும் இந்த நிகழ்ச்சி நடந்தது. அண்ணா சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில், நகராட்சி தலைவி சுசீலா, கவுன்சிலரும், அக்கட்சியின் சுற்றுச்சூழல் அணி தலைவர் மற்றும் தலைமை பேச்சாளருமான ஜாகிர் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். உடனடியாக அந்த வீடியோ வைரலானது. இதனை பார்த்து தி.மு.க.,வை விமர்சித்து வருகின்றனர்.
அண்ணாமலை விமர்சனம்
இந்த வீடியோவை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் தனது 'எக்ஸ் ' சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டதுடன், '' ஹிந்தி எதிர்ப்புப் போர்வையில், வளையலைத் திருடும் குன்னூர் நகர்மன்ற 25-வது வார்டு திமுக கவுன்சிலர் திரு ஜாகிர் உசேன். திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது!'' என விமர்சித்து உள்ளார்.




மேலும்
-
'கிங்' கோலி விளாசல்... பைனலில் இந்தியா * வெளியேறியது ஆஸ்திரேலியா
-
பாக்.,கில் தற்கொலைப் படை தாக்குதல்: 9 பேர் பலி
-
பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி!
-
14.8 கிலோ தங்கம் கடத்தல்: கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!
-
மாநில அரசுகள் தோல்வி: சுப்ரீம் கோர்ட்
-
சாம்பியன்ஸ் டிராபி : ஆஸி.,யை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது இந்திய அணி