பாக்.,கில் தற்கொலைப் படை தாக்குதல்: 9 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்தனர்.
காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதத்தை தூண்டி விடும் பாகிஸ்தானும், பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல் சம்பவங்களை எதிர்கொண்டு வருகிறது.
இன்று(மார்ச் 04) கைபர் பக்துன்க்வாவில் உள்ள ராணுவ அதிகாரிகள் முகாமில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்தனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக்கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பாதுகாப்பு படையினரின் கவனத்தை திசைதிருப்ப வேண்டும் என்பதற்காக, பயங்கரவாதிகள் இன்னொரு இடத்தில் காரில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்
-
தாம்பரத்தில் பாதாள சாக்கடை குழாய் பதிப்பு பணியில் அதிகாரிகள் அலட்சியம் மாநகராட்சியாகியும் பயனில்லை என குற்றச்சாட்டு
-
சிறுமியருக்கு பாலியல் தொல்லை மாணவன் உட்பட 2 பேர் கைது
-
தேரோட்டம் திருக்கல்யாணம் உள்ளூர் விடுமுறை?
-
குளத்தில் மீ ன் பிடித்த தொழிலாளி பலி
-
கடை உரிமையாளரிடம் பணம் பறித்த நபர் கைது
-
மாமல்லை - முதலியார்குப்பம் மகளிர் தின சிறப்பு சுற்றுலா