சாதிக்குமா தென் ஆப்ரிக்கா * அரையிறுதியில் நியூசிலாந்துடன் மோதல்

லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லாகூரில் மார்ச் 5ம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் 'பி' பிரிவில் முதலிடம் பிடித்த தென் ஆப்ரிக்கா, 'ஏ' பிரிவில் இரண்டாவது இடம் பெற்ற நியூசிலாந்தை சந்திக்கிறது.
நியூசிலாந்து அணி 2015, 2019 உலக கோப்பை தொடரின் பைனல், 2021 ல் 'டி-20' உலக கோப்பை பைனலில் தோற்ற சோகத்தில் உள்ளது.
இம்முறை கேப்டன் டாம் லதாம் (3 போட்டி, 187 ரன்), ரச்சின் ரவிந்திரா (118), வில் யங் (129), பிலிப்ஸ் (94) பேட்டிங்கில் கைகொடுப்பது, சமீபத்திய முத்தரப்பு தொடரில் தென் ஆப்ரிக்காவை வென்றது நம்பிக்கை தருகிறது. பவுலிங்கில் ஹென்றி (8 விக்.,), ரூர்கே (6) வேகத்தில் மிரட்டுகிறார். சுழலில் பிரேஸ்வெல் (5 விக்.,), கேப்டன் சான்ட்னர் (4) உதவலாம்.
தென் ஆப்ரிக்கா அணி வழக்கம் போல லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டது. பேட்டிங்கில் ரிக்கிள்டன் (130), துசென் (124), கேப்டன் பவுமா (58), கிளாசன் (64) உதவுகின்றனர். பவுலிங்கை பொறுத்தவரையில் நியூசிலாந்து அணியை விட சற்று பலமாக திகழ்கிறது. முல்டர் (5 விக்.,), ரபாடா (4), யான்சென் (4), மஹாராஜ் (3), லுங்கிடி (3) உள்ளனர்.
எனினும், 'நாக் அவுட்' போட்டி என்றவுடன், ஒரு வித பதட்டம் தென் ஆப்ரிக்க வீரர்களை தொற்றிக் கொள்ளும். இந்த நெருக்கடியை சமாளித்து கரை சேர்ந்தால் பைனலுக்கு செல்லலாம்.
மேலும்
-
ரூ.6 கோடியில் 'டெஸ்ட்டிங் லேப்'
-
அலர்ஜி மருந்து ஊசியில் போதை ஏற்றும் இளசுகள்; சுகாதார துறை விழிப்பது அவசியம்
-
'டாப்' பொருளாதார நாடுகள் ஜப்பானை நெருங்கிய இந்தியா
-
பறக்கும் படைக்கு தேர்வு அறைக்குள் தடை; ஒழுங்கீன செயல்களை தடுப்பதில் சிக்கல்
-
இரட்டை கொலையில் 2 பேரிடம் விசாரணை
-
ஹட்சன் அக்ரோ வசமான மில்க் மந்த்ரா