ஹட்சன் அக்ரோ வசமான மில்க் மந்த்ரா

புதுடில்லி:ஹட்சன் அக்ரோ புராடக்ட் நிறுவனம், ஒடிசாவைச் சேர்ந்த மில்க் மந்த்ரா டெய்ரி மற்றும் அதன் 'மில்கி மூ' பிராண்டை 233 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியுள்ளது.

சென்னையை தளமாகக் கொண்ட பால் நிறுவனமான ஹட்சன் அக்ரோ புராடக்ட் நிறுவனம், ஒடிசாவை சேர்ந்த மில்க் மந்த்ரா டெய்ரி மற்றும் அதன் மில்கி மூ பிராண்டை 233 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியுள்ளது.

ஹட்சன் அக்ரோ புராடக்ட், 3,900க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களுடன், தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வலுவான சந்தை இருப்பை கொண்டுள்ளது.

தற்போது, மஹாராஷ்டிரா, கேரளா, ஒடிசா, கோவா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், குஜராத் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கால் பதிக்க துவங்கியுள்ளது.

Advertisement