இரட்டை கொலையில் 2 பேரிடம் விசாரணை

கடமலைக்குண்டு; தேனி மாவட்டம் வருஷநாடு அருகே வனப்பகுதியையொட்டி இருந்த விவசாய நிலத்தில் சில நாட்களுக்கு முன் விவசாயிகள் இருவர் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தனர்.

போலீஸ் விசாரணையில் இறந்தவர்கள் வருஷநாடு அருகே தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் 45, வருஷநாடு வைகைநகரைச் சேர்ந்த கருப்பையா 55, என தெரிந்தது. அவர்களது உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்கள் இருந்துள்ளன. தந்தை கருப்பையாவை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க வலியுறுத்தி மகன் சந்திரசேகரன் போலீசில் புகார் அளித்தார்.

டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் தலைமையில் தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கடமலைக்குண்டு மேலப்பட்டியைச்சேர்ந்த கணேசன் ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இக்கொலை தொடர்பாக நேற்று போலீசார் கோவில்பாறையைச் சேர்ந்த முருகன் 55, அவரது மகன் அஜித் 25, ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.

மணிகண்டன், கருப்பையா உடல்கள் பிரதே பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

Advertisement