தேரோட்டம் திருக்கல்யாணம் உள்ளூர் விடுமுறை?

திருவொற்றியூர்:தியாகராஜ சுவாமி கோவில், மாசி பிரம்மோத்சவத்தின் முக்கிய நிகழ்வான, தேரோட்டம் மற்றும் திருக்கல்யாண வைபவத்திற்கு, உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது.

இக்கோவிலில், ஆண்டுதோறும், மாசி மாதம் பிரம்மோத்சவ திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். அதன்படி, இவ்வாண்டு, மார்ச் 3ல் விநாயகர் உத்சவத்துடன், மாசி பிரம்மோத்சவம் துவங்கியது.

முக்கிய நிகழ்வான, திருத்தேர் உத்சவம், 10ம் தேதி திங்கட்கிழமை; கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம், 12ம் தேதி புதன் கிழமை நடைபெறுகிறது.

இவ்விரு நிகழ்விலும் பங்கேற்க, திருவொற்றியூர் மட்டுமின்றி, சென்னை மாவட்டம் முழுதுமிருந்தும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.

எனவே, அனைவரும் பங்கேற்கும் வகையில், இவ்விரு திருவிழாவிற்கும், மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்என, பக்தர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement