சிறுமியருக்கு பாலியல் தொல்லை மாணவன் உட்பட 2 பேர் கைது
சென்னை:திருவான்மியூரைச் சேர்ந்த 5 வயது சிறுமி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த 18 வயதுள்ள கல்லுாரி மாணவன், சிறுமியை துாக்கி மடியில் அமர வைத்து, சில்மிஷம் செய்துள்ளார். இதை, பெற்றோரிடம் சிறுமி கூறினார்.
திருவான்மியூர் மகளிர் போலீசார் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரித்து, சில்மிஷத்தில் ஈடுபட்ட மாணவனை 'போக்சோ'வில் கைது செய்தனர்.
அதேபோல், மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் உள்ள 14 வயது சிறுமி, 9ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த கார்த்திக், 35, என்ற போதை ஆசாமி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரின் பிடியில் இருந்து மாணவி தப்பித்துள்ளார்.
சைதாப்பேட்டை மகளிர் போலீசார் விசாரித்து, கார்த்திக்கை 'போக்சோ'வில் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.