பிரையன்ட் பூங்காவில் ரோஜா கவாத்து பணி

கொடைக்கானல்; திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் ரோஜா கவாத்து எடுக்கும் பணி தொடங்கியது.

இப்பூங்காவில் ஆண்டுதோறும் மலர்கண்காட்சி நடக்கும். இதற்காக 3 கட்ட மலர் நாற்று நடவு பணிகள் நடந்துள்ளன. எதிர்வரும் 62 வது மலர்கண்காட்சிக்காக பூங்காவில் உள்ள ரோஜா செடிகளில் கவாத்து எடுக்கும் பணி நடந்தது. இப்பணிகளை தொடர்ந்து காப்பர் ஆக்சிகுளோரைடு மருந்து பூசப்பட்டது. பராமரிப்பு பணிகள் மேற்கொண்ட 45 நாட்களில் பல வண்ணங்களில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்கும்.

இங்கு நடவு செய்யப்பட்டுள்ள இதர மலர் நாற்றுக்களுடன் இவ்வகை ரோஜா பூக்களும் அழகுற பூத்து பயணிகளை மகிழ்விக்கும். ரோஜா கவாத்து பணிகளை துணை இயக்குனர் நடராஜன், உதவி இயக்குனர் பார்த்தசாரதி, தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் பார்வையிட்டனர்.

Advertisement