கார்பன் அடையாளத்தை கண்காணிக்க உதவும் 'ஏஐ' திருப்பூர் தொழில்துறையினர் நம்பிக்கை
திருப்பூர்:இந்தியாவின் பின்னலாடை வர்த்தக தொழில் நகராகிய திருப்பூரில், 'ஏஐ' தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், பல்வேறு சவால்களுக்கு எளிதாக தீர்வு கிடைக்கும். ஆற்றல் மேலாண்மை கட்டமைப்பின் மூலமாக, மின்பயன்பாட்டை பகுப்பாய்வு செய்து, உபயோகத்தை குறைக்கலாம். மின்சார பயன்பாட்டை குறைப்பதன் மூலமாக, 10 முதல் 20 சதவீதம் வரை, கார்பன் அடையாளத்தை குறைக்க முடியும்.
இத்தொழில்நுட்பத்தால், சாய ஆலைகளில் பயன்படுத்தும் இயந்திரம், ரசாயணம் மற்றும் சாயம் கலக்கும் பணி எளிதாக மாறும்; பயன்பாடும் குறையும். இதன் வாயிலாக, 30 சதவீதம் அளவுக்கு தண்ணீர் பயன்பாட்டையும், ரசாயனம் மற்றும் சாயத்தையும் குறைக்கலாம்.
ஜவுளிக்கழிவுகளை எளிதாக பெற்று, அவற்றை மீண்டும் ஆடைகளாக மாற்றும் தொழில்நுட்ப பணிகளை செய்யலாம். முக்கியமாக, 'ஏஐ' தொழில்நுட்பத்தை செயல்படுத்தினால், சில வகை செயலிகள் வாயிலாக, மூலப்பொருள் பெறும் வகையிலேயே, கார்பன் உமிழ்வுகளை கண்காணிக்க முடியும். இதனால், கார்பன் உமிழ்வை கண்காணித்தும், கட்டுப்படுத்தியும், ஜவுளி இறக்குமதி நாடுகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யலாம்.
கண்காணிக்கலாம்!
ஜவுளித்தொழிலின் ஆதாரமாக உள்ள, 'ஸ்பின்னிங்' மில்களில், 'ஏஐ' தொழில்நுட்பத்தை பின்பற்றினால், பிரதான இயந்திரம் மற்றும் கருவிகளில், கோளாறு ஏற்படும் போது, முன்கூட்டியே கண்டறிந்து, அவற்றின் பழுதுகளை நீக்க முடியும். இதனால், மின்நுகர்வு, 15 சதவீதம் வரை குறைவதுடன், இயந்திரங்களின் ஆயுளையும் நீட்டிக்க வாய்ப்புள்ளது.
காற்றாலை மின் உற்பத்தி, சூரிய மின்சக்தி உற்பத்தியிலும், 'ஏஐ' தொழில்நுட்பத்தை செயல்படுத்தலாம். பருத்தி விளைச்சலில், இத்தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை பின்பற்றினால், விளைச்சல் நிலையிலேயே, பருத்தி பஞ்சு உற்பத்தியில் கார்பன் விளைவு கண்காணிக்கப்படும்; முற்றிலும், பசுமை பருத்தி உற்பத்தி மேம்படும். சர்வதேச சந்தைகளில், 'கிரீன் டேக்' நிலையை அடைய முடியும்.
ஏஐ' தொழில்நுட்பத்தை, இயந்திரங்கள், ஆற்றல் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, 'லாஜிஸ்டிக்ஸ்', 'ஆட்டோமேஷன்' பிரிவுகளில் பின்பற்றலாம். 'ஏஐ' தொழில்நுட்ப சேவை வழங்க, பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தயாராகிவிட்டன. 'கார்பன் ட்ரயல்', 'ஸ்மார்ட் டெக்ஸ்', 'மெகன்டா' ஆகியவற்றுக்கான 'ஏஐ' சேவைகளை பெறலாம். மத்திய அரசு திட்டம் வாயிலாக, சாத்தியள்ள மானியங்களையும் பெற்று பயன்பெறலாம்.
- ஜெய்பிரகாஷ்'ஸ்டார்ட் அப் இந்தியா'வழிகாட்டி ஆலோசகர்
மேலும்
-
சிக்னல் பழுதால் சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதம்! பயணிகள் பாதிப்பு
-
மாணவர் உயிரிழப்பு; பள்ளியில் விழிப்புணர்வு
-
சேலம் - கொச்சின் விமான சேவை: வரும் 30 முதல் தினமும் இயக்கம்
-
ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்தினரும் தர்ணா
-
பஸ்கள் இயக்கத்தால் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
-
ஆசிரியரல்லா பணியிடம் நிரப்ப தொழிலாளர் சங்கம் எதிர்ப்பு