பெண்கள் பாதுகாப்பு கல்லுாரியில் விழிப்புணர்வு

திருப்பூர்:விழுதுகள் தன்னார்வ அமைப்பு, திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியன இணைந்து உலக மகளிர் தினம் முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடத்தின.மகளிர் பாதுகாப்பு மற்றும் சட்ட ரீதியான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி செயின்ட் ஜோசப் மகளிர் கல்லுாரியில் நடந்தது. முன்னதாக விழுதுகள் திட்ட மேலாளர் சந்திரா வரவேற்றார்.

கல்லுாரி முதல்வர் சகாய தமிழ் செல்வி முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி ஷபீனா தலைமை வகித்து பேசுகையில், ''அடிப்படை உரிமை என்ன என்பதை அனைவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். பெண்கள் பாதுகாப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு அனைவரிடம் ஏற்பட வேண்டும். இச்சமூகத்தில், ஆணும் பெண்ணும் சமமாக இருக்க வேண்டும். பெண்ணுரிமை, சமூக பாதுகாப்பு என்பது அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும்,'' என்றார்.

திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வக்கீல்கள் முஸ்தபா, முத்துலட்சுமி ஆகியோர் பேசினர். விழுதுகள் திட்ட மேலாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

Advertisement