மின்வாரிய கேங்க்மேன் பணியாளர் ஆர்ப்பாட்டம்


மின்வாரிய கேங்க்மேன் பணியாளர் ஆர்ப்பாட்டம்


ஈரோடு:தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு - சி.ஐ.டி.யு., சார்பில், ஈரோட்டில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. துணை செயலர் எழுமலை தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், ஸ்ரீதேவி, மணிகண்டன் உட்பட பலர் கோரிக்கை குறித்து பேசினர். கேங்க்மேன் பதவியை கள உதவியாளர் பதவியாக மாற்ற வேண்டும். அனைத்து வட்டங்களிலும் கேங்க்மேன் பதவிக்கான அனுமதி வழங்க வேண்டும். ஏற்கனவே தேர்வு செய்து பணியாணை வழங்காத, 5,000 கேங்க்மேன்களுக்கும் பணி நியமன ஆணை வழங்க வேண்டும். கேங்க்மேன்களுக்கு சீருடை வழங்கி, சலவைப்படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
வாய்க்காலில் குளித்தகல்லுாரி மாணவர் மாயம்புன்செய்புளியம்பட்டி:கோவை, துடியலுாரை சேர்ந்த முஸ்தாக் மகன் ஆருண், 18; முதலாமாண்டு கல்லுாரி மாணவர். நண்பர்கள் இருவருடன் ஈரோடு மாவட்டம் கோபிக்கு நேற்று வந்துள்ளார். வழியில் புன்செய்புளியம்பட்டி அடுத்த செண்பகபுதுார் அருகே, தடை செய்யப்பட்ட பகுதியான, கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி மூவரும் குளித்தனர். தற்போது, 2,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆழமான பகுதிக்கு சென்ற ஆருண், நீச்சல் தெரியாத நிலையில் மூழ்கி மாயமானார். சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள், இரண்டு குழுக்களாக பிரிந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement