ஈ.வி.கே.சம்பத் பிறந்த நாள் அமைச்சர் மாலை அணிவிப்பு


ஈ.வி.கே.சம்பத் பிறந்த நாள் அமைச்சர் மாலை அணிவிப்பு

ஈரோடு:ஈரோடு மாநகர் மாவட்ட காங்., சார்பில், தமிழக காங்., முன்னாள் துணை தலைவரான ஈ.வி.கே.சம்பத் நுாறாவது பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே உள்ள அவரது உருச்சிலைக்கு, அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் எம்.எல்.ஏ., சந்திரகுமார், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் ரவி
உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement