தெருநாயால் விபத்துஎலக்ட்ரீசியன் பலி


தெருநாயால் விபத்துஎலக்ட்ரீசியன் பலி

கோபி:-கோபி அருகே கலிங்கியத்தை சேர்ந்தவர் ரங்கநாதன், 60. எலக்ட்ரீசியன்; இவரின் மனைவி தேவி, 59; இருவரும் யமாகா பைக்கில் அதே பகுதி சாலையில், கடந்த, 2ம் தேதி மதியம்
சென்றனர். அப்போது சாலையின் குறுக்கே தெருநாய் வந்ததால், பைக்கில் இருந்து விழுந்த இருவரும் காயமடைந்தனர். கோபி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரங்கநாதன் நேற்று இறந்தார். மனைவி தேவி புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement