விமானிகளுக்கு ஆக்சிஜன் கருவி சோதனை வெற்றி

புதுடில்லி: டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின், ராணுவ உயிரி பொறியியல் மற்றும் எலக்ட்ரோ மருத்துவ ஆய்வகம் பெங்களூரில் உள்ளது.

இங்கு, பல ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் பறக்கும் தேஜஸ் போர் விமானத்தில், சிலிண்டர் வாயிலாக ஆக்சிஜன் வினியோகத்திற்கு பதில், விமானத்திற்கு உள்ளேயே ஆக்சிஜன் உற்பத்தி ஆகும் சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனத்தை, 'தேஜஸ்' போர் விமானத்தில் பொருத்தி, மிக அதிக உயரத்தில் பறக்கும் போது சோதனைக்கு உட்படுத்தினர். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த சாதனம், விமானிக்கு தேவையான ஆக்சிஜனை வெற்றிகரமாக அளித்தது.

மாதிரி போர் விமானங்களில் இந்தக் கருவிகள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 50,000 அடி உயரம் வரை சென்று சோதனை நடத்தப்பட்டதில், இந்தக் கருவிகளின் செயல்பாடுகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை பூர்த்தி செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement