ராக்கெட் ஏவுதளம் கட்டுமானம் பூமி பூஜையுடன் துவக்கம்

குலசேகரன்பட்டினம்:இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் சார்பில், துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இதற்காக, 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி, 2024, பிப்ரவரியில் நாட்டினார். அதன் தொடர்ச்சியாக, குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள இடத்தில் கட்டுமான பணிகள் துவங்குவதற்கு பூமி பூஜை நேற்று நடந்தது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் ராஜராஜன் தலைமையில் நிகழ்ச்சிகள் நடந்தன. இஸ்ரோ விஞ்ஞானிகள் பலர் பங்கேற்றனர். வெளியாட்கள் அந்த வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

பணிகள் ஓரிரு ஆண்டுகளில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement