மாணவர்களுக்கு தொந்தரவு சில்மிஷ ஆசிரியர் சிக்கினார்

திருவாரூர்:திருவாரூரில், அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் அருகே, கொடிக்கால்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் சீனிவாசன், 51. இவர், அதே பள்ளியில் படிக்கும், 14 வயது மாணவர்கள் இருவரையும் கடந்த ஆகஸ்டில் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு இருவருக்கும் இந்த ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள், தங்கள் பெற்றோர்களிடம், தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை தாமதமாக தெரிவித்தனர்.

இதுகுறித்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விசாரணை நடத்தி, திருவாரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ வழக்கில் சீனிவாசனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Advertisement