சாலையோர மரங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி

கீழம்பி:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, காஞ்சிபுரம் - வேலுார் சாலையில், பேருந்து, லாரி, கார், வேன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.
இந்த சாலைகளில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையோர மரத்தில் மோதி விபத்து ஏற்படாமல் இருக்க, நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் வாயிலாக சாலையோரம் உள்ள மரங்களுக்கு வெள்ளை வர்ணம் அடிக்கும் பணி முதற்கட்டமாக காஞ்சிபுரம் --- வந்தவாசி சாலையில் நடந்தது.
தற்போது இரண்டாவது கட்டமாக, காஞ்சிபுரம் - வேலுார் சாலையில் சாலையோர மரங்களுக்கு கறுப்பு மற்றும் வெள்ளை நிற வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகில் இருந்து கீழம்பி சந்திப்பு வரை 4.500 கி.மீ., நீளத்திற்கு சாலையின் இரு ஓரங்களிலும் உள்ள அனைத்து வகை மரங்கள், மின் கம்பங்கள், நெடுஞ்சாலைத் துறை குறியீடு மற்றும் ஊர் பெயர் பலகை பொருத்தப்பட்ட கம்பங்கள், தொலைபேசி கம்பங்களுக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிற வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும்
-
2026 சட்டசபை தேர்தலில் பினராயி விஜயன் போட்டியில்லை? இன்று கூடுகிறது மார்க்சிஸ்ட் மாநில மாநாடு
-
செந்தில் பாலாஜிக்கு குறி: சென்னை, கரூரில் அமலாக்கத்துறை சோதனை!
-
மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும்; லண்டன் புறப்பட்ட இளைய ராஜா பேட்டி
-
தூத்துக்குடி இரட்டைக் கொலை வழக்கு: எஸ்.ஐ.,யை தாக்கி விட்டு தப்பியவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்
-
மதுரை அரசு மருத்துவமனையில் 'தண்ணீராய்' செலவாகுது மக்கள் பணம்; ஓராண்டு செலவு மட்டும் 26 கோடி ரூபாய்!
-
முதல்வர் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டோர் உயிரிழப்பு; தி.மு.க.,வே இழப்பீடு தரவேண்டும்!