மேகதாது திட்டத்துக்கு அனுமதி காங்., உறுப்பினர் விருப்பம்

பெங்களூரு:கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, சட்டசபையில் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஜெயச்சந்திரா பேசியது:
சபாநாயகர் விதான் சவுதாவில் நிறைய மாற்றங்களை கொண்டு வர நினைக்கிறார். அதில் ஒரு முயற்சி தான் ஐந்து நாட்கள் நடந்த புத்தக திருவிழா.
விதான் சவுதாவை வெளியில் இருந்தே பார்த்தவர்கள், புத்தக திருவிழா வாயிலாக உள்ளே வந்து பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். இதற்காக சபாநாயகருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தவுடன், ஐந்து வாக்குறுதித் திட்டங்களும் அமல்படுத்தப்பட்டன. இந்த திட்டங்கள் இடைத்தரகர்கள் குறுக்கீடு இல்லாமல், மக்களை நேரடியாக சென்றடைகின்றன.
ஐந்து திட்டங்களும் மக்களின் பொருளாதாரம், சமூக வலிமையை அதிகரித்துள்ளன. அரசின் திட்டங்கள் பற்றி தன் உரையில் பேசிய, கவர்னருக்கு நன்றி.
67 டி.எம்.சி.,
பெங்களூரு இன்று வேகமாக வளரும் நகரமாகிவிட்டது. மக்கள்தொகை 1.40 கோடியாக உள்ளது. 2050ம் ஆண்டிற்குள் மக்கள்தொகை 3 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டு இருக்கும், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் பெங்களூருக்கு 67 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கும். பெங்களூரு, அதை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க உதவும்.
இதேபோல தேசிய திட்டமாக அறிவிக்கப்பட்ட, பத்ரா மேலணை திட்டத்திற்கு 5,300 கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வெண்டும்.
மாநிலத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர்களாக உயர்த்த வேண்டும். மஹாராஷ்டிராவுக்கு அடுத்து அதிக வரி வசூல் செய்யும் மாநிலம் கர்நாடகா தான். சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 10.27 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
புளிய மர பூங்கா
மாநிலத்தில் ஏழு இடங்களில் உணவு பூங்கா நிறுவ முடிவு எடுக்கப்பட்டது. இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று, பல முறை கேட்டுள்ளேன். ஆனால், 'செவிடர் காதில் சங்கு ஊதுவது' போல, யாரும் என் சொல்லை கேட்பது இல்லை.
உணவு பூங்கா அமைந்தால் தான் விவசாயிகள் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.
சித்ரதுர்கா, துமகூரு மாவட்டங்களில் மழை குறைவு. இந்த மாவட்டங்களில் முக்கிய வணிக பயிராக புளி உள்ளது. புளி மருத்துவ குணம் கொண்டது. உள்நாடு, வெளிநாட்டில் அதிக தேவை உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு அடுத்து கர்நாடகா தான் அதிக புளி உற்பத்தி செய்கிறது. இதனால் துமகூரு மாவட்டத்தில் புளிய மர பூங்கா கட்டப்பட வேண்டும். இதற்காக 20 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
மேலும்
-
தூத்துக்குடி இரட்டைக் கொலை வழக்கு: எஸ்.ஐ.,யை தாக்கி விட்டு தப்பியவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்
-
மதுரை அரசு மருத்துவமனையில் 'தண்ணீராய்' செலவாகுது மக்கள் பணம்; ஓராண்டு செலவு மட்டும் 26 கோடி ரூபாய்!
-
முதல்வர் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டோர் உயிரிழப்பு; தி.மு.க.,வே இழப்பீடு தரவேண்டும்!
-
தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை; 10 மாத்திரை அதிகமாக சாப்பிட்டேன்: சொல்கிறார் பின்னணி பாடகி கல்பனா
-
பாட்டியின் ரூ.80 லட்சம் 'அபேஸ்'; உளறிய பேத்தியால் விபரீதம்
-
வரி செலுத்தாத 2 நிறுவனங்களை இழுத்து மூடியது குடிநீர் வாரியம்