குடிநீர் பணியால் சேதமான சாலை நெடுஞ்சாலைத் துறை சீரமைப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில், ஒரு மாதத்திற்கு முன், நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது.
காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பள்ளம் தோண்டி, கடந்த மாதம் சீரமைத்தனர். ஆனால், ஒரு மாதமாகியும் பள்ளம் தோண்டிய இடத்தை முறையாக தார் ஊற்றி சாலையை சீரமைக்கவில்லை.
இதனால், சாலை சேதமடைந்த பகுதியில், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கினர்.
இதனால், சேதமடைந்த சாலையை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர். இருப்பினும், மாநகராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்க ஒரு மாதமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், குடிநீர் குழாய் சீரமைப்புக்காக, மாநகராட்சி ஊழியர்கள் சேதப்படுத்திய சாலையை, நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று தார் கலவை வாயிலாக சீரமைத்தனர்.
மேலும்
-
மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும்; லண்டன் புறப்பட்ட இளைய ராஜா பேட்டி
-
தூத்துக்குடி இரட்டைக் கொலை வழக்கு: எஸ்.ஐ.,யை தாக்கி விட்டு தப்பியவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்
-
மதுரை அரசு மருத்துவமனையில் 'தண்ணீராய்' செலவாகுது மக்கள் பணம்; ஓராண்டு செலவு மட்டும் 26 கோடி ரூபாய்!
-
முதல்வர் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டோர் உயிரிழப்பு; தி.மு.க.,வே இழப்பீடு தரவேண்டும்!
-
தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை; 10 மாத்திரை அதிகமாக சாப்பிட்டேன்: சொல்கிறார் பின்னணி பாடகி கல்பனா
-
பாட்டியின் ரூ.80 லட்சம் 'அபேஸ்'; உளறிய பேத்தியால் விபரீதம்