இ.பி.எப்., பணம் எடுக்க புதிய வசதி: மத்திய அரசு திட்டம்

புதுடில்லி;யு.பி.ஐ., மற்றும் ஏ.டி.எம்.கள் மூலம் இ.பி.எப்., பணம் எடுக்கும் வசதி விரைவில் தொடங்குவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
பல நேரங்களில், அடிக்கடி நிராகரிப்பு காரணமாக இ.பி.எப்., பணம் எடுப்பதில் ஊழியர்கள் சிரமப்படுகிறார்கள்.
எனவே, பணம் எடுப்பதை ஒழுங்குபடுத்தவும், செயல்முறையை விரைவுபடுத்தவும், யு.பி.ஐ., வழியாக இ.பி.எப்., பணம் எடுப்பதை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய வசதி, ஜி-பே, போன்-பே மற்றும் பே.டி.எம்., போன்ற யு.பி.ஐ., தளங்களைப் பயன்படுத்தி இ.பி.எப்., உறுப்பினர்கள் தங்கள் சேமிப்பை உடனடியாக எடுக்க அனுமதிக்கும்.
இந்த அம்சத்தை வெளியிடுவதற்காக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எப்.ஓ.,) தற்போது இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்துடன் (என்.பி.சி.ஐ.,) கலந்து ஆலோசித்து வருகிறது.
இந்தத் திட்டம் மே அல்லது ஜூன் 2025க்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஏடிஎம் பணம் எடுப்பது உட்பட இ.பி.எப்.ஓ., 3.0 முயற்சி இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் செயல்படுத்தப்படும் என்று மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மண்டவியா ஜனவரி 2025ல் தெரிவித்தார்.
யு.பி.ஐ., அடிப்படையிலான இ.பி.எப்., பணம் எடுப்பது ஊழியர்களுக்கு பல நன்மைகளை வழங்கும். இது நிதி தேவைகளை உடனடியாக பெறலாம்.தற்போதைய இ.பி.எப்., பணம் எடுக்கும் செயல்முறையான 23 நாட்களுடன் ஒப்பிடும்போது உறுப்பினர்கள் தங்கள் சேமிப்பை சில நிமிடங்களில் எடுக்க அனுமதிக்கிறது.
புதிய செயல்முறை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும்.
மேலும், இ.பி.எப்.ஓ., 3.0 அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், சந்தாதாரர்கள் தங்கள் சேமிப்பை வழக்கமான வங்கிக் கணக்கைப் போலவே எடுக்க முடியும், இது ஊழியர்களுக்கு மேலும் வசதியாக இருக்கும்.
மேலும்
-
மதுரை அரசு மருத்துவமனையில் 'தண்ணீராய்' செலவாகுது மக்கள் பணம்; ஓராண்டு செலவு மட்டும் 26 கோடி ரூபாய்!
-
முதல்வர் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டோர் உயிரிழப்பு; தி.மு.க.,வே இழப்பீடு தரவேண்டும்!
-
தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை; 10 மாத்திரை அதிகமாக சாப்பிட்டேன்: சொல்கிறார் பின்னணி பாடகி கல்பனா
-
பாட்டியின் ரூ.80 லட்சம் 'அபேஸ்'; உளறிய பேத்தியால் விபரீதம்
-
கோர்ட்டில் ஆஜராகாத ராகுலுக்கு ரூ.200 அபராதம்; லக்னோ கோர்ட் உத்தரவு
-
மன அழுத்தம் குறைக்கும் பழங்கள்