மன அழுத்தம் குறைக்கும் பழங்கள்

நவீன யுகத்தில் மனிதர்களாகிய நாம் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னைகளுள் ஒன்று மன அழுத்தம். இதைச் சரி செய்வதற்குப் பல்வேறு வழிகள் இருக்கின்றன. புதிய வழிகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். நம்முடைய குடல் ஆரோக்கியத்திற்கும் மூளைக்கும், மன நிலைக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நம் குடலில் வாழ்கின்ற சில நல்ல நுண்ணுயிர்களால் மன அழுத்தத்தைச் சரி செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வர்ட் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் ஆரஞ்சு முதலிய சிட்ரஸ் பழங்களைச் சாப்பிட்டால் குடலில் உள்ள ஃபேசிகலிபாக்டீரியம் ப்ராஸ்நிட்சி (Faecalibacterium prausnitzii) என்கின்ற ஒரு வகை குடல் பாக்டீரியா பெருகும் என்று தெரியவந்துள்ளது. சிட்ரிக் அமிலம் அதிகம் கொண்ட பழங்கள் சிட்ரஸ் பழங்கள் எனப்படுகின்றன. திராட்சை, சாத்துக்குடி, எலுமிச்சை, நார்த்தங்காய் ஆகியவை இந்த வகையில் வரும்.
இந்த பாக்டீரியாவுக்கும் மகிழ்ச்சி ஹார்மோன்களான செரொடொனின் (serotonin), டோபோமைன் (dopamine) ஆகியவற்றின் உற்பத்திக்கும் தொடர்பு இருக்கிறது. இவை நமக்கு மன அமைதியும் மகிழ்ச்சியும் தருகின்றன. எனவே ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களை உண்பது மன அழுத்தத்தை 20 சதவீதம் வரை குறைக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மேலும்
-
காஷ்மீர் பிரச்னை குறித்து பாக்., பத்திரிகையாளர் கேள்வி: ஜெய்சங்கர் நச் பதில்!
-
காமராஜர் பெயரை நீக்கி விட்டு காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா? சீமான் கொந்தளிப்பு
-
மும்மொழி கொள்கைக்கு அனுமதி அளிக்கணும்: சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ., முறையீடு
-
இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து தஹாவூர் ராணா அவசர மனு!
-
சாலைகளில் கட்சி கொடி கம்பங்கள் வைக்க கூடாது: ஐகோர்ட் கிளை மீண்டும் உத்தரவு
-
இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகம்; தி.மு.க., அரசை கேட்கிறார் ராமதாஸ்