சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பைனலில் இந்தியா - நியூசி., மோதல்

லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் வரும் 9 ம் தேதி துபாயில் நடக்கும் பைனலில் இந்திய அணியை எதிர்கொள்கிறது.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லாகூரில் மார்ச் 5ம் தேதி நடந்த இரண்டாவது அரையிறுதியில் 'பி' பிரிவில் முதலிடம் பிடித்த தென் ஆப்ரிக்கா, 'ஏ' பிரிவில் இரண்டாவது இடம் பெற்ற நியூசிலாந்தை சந்தித்தது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர் வில் யங் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் அதிரடியாக விளையாட துவங்கினர். இவர்களை பிரிக்க தென் ஆப்ரிக்கா செய்த அனைத்து முயற்சிகளும் வீணானது. ரச்சின் ரவீந்திரா 101 பந்தில் 108 ரன்களுக்கு அவுட்டானார். கேன் வில்லியம்சன் 94 பந்தில் 102 ரன்களுக்கு அவுட்டானார்.
பிறகு வந்த டேரில் மிச்சல் 49, டாம் லாதம் 4, மிச்சல் பிரேஸ்வெல் 16 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் குவித்தது. பிலிப்ஸ் 49, கேப்டன் சான்ட்னர் 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.தென் ஆப்ரிக்காவின் நிகிடி 3 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற 363 ரன்கள் என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதன் பின்னர் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணியினர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்கத் துவங்கினர். முதல் 20 ஓவர்களில் தென் ஆப்ரிக்காவுக்கே சாதகமாக இருந்தது. பிறகு, நியூசிலாந்து அணியினர் ஆதிக்கம் செலுத்த துவங்கினர். இதனால் தென் ஆப்ரிக்க வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க துவங்கினர்.
துவக்க வீரர் ரியான் ரிக்கல்டன் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் டெம்பா பவுமா 56 ரன்னிலும், ரசி வான் டெர் டுசன் 69 ரன்னிலும், மார்க்ரம் 31, ஹென்ரிச் க்ளாசன் 3, வியான் முல்டர் 8, மார்கோ ஜென்சன் 3, கேசவ் மஹாராஜ்1, ரபாடா 16, ரன்னிலும் அவுட்டானார்கள். தென் ஆப்ரிக்கா அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 50 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் வரும் 9ம் தேதி துபாயில் நடக்கும் பைனலில் இந்திய அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்கிறது. தென் ஆப்ரிக்காவின் மில்லர் சதம் அடித்தார். இருப்பினும் அது தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு உதவவில்லை.
ஐ.சி.சி., கிரிக்கெட் தொடர்களின் நாக் அவுட் சுற்று போட்டிகளில் தென்னாப்ரிக்கா அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது அந்நாட்டு ரசிகர்களிடையே மேலும் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
மதுரை அரசு மருத்துவமனையில் 'தண்ணீராய்' செலவாகுது மக்கள் பணம்; ஓராண்டு செலவு மட்டும் 26 கோடி ரூபாய்!
-
முதல்வர் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டோர் உயிரிழப்பு; தி.மு.க.,வே இழப்பீடு தரவேண்டும்!
-
தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை; 10 மாத்திரை அதிகமாக சாப்பிட்டேன்: சொல்கிறார் பின்னணி பாடகி கல்பனா
-
பாட்டியின் ரூ.80 லட்சம் 'அபேஸ்'; உளறிய பேத்தியால் விபரீதம்
-
கோர்ட்டில் ஆஜராகாத ராகுலுக்கு ரூ.200 அபராதம்; லக்னோ கோர்ட் உத்தரவு
-
மன அழுத்தம் குறைக்கும் பழங்கள்