'சேஸ் மாஸ்டர்' கோலி * 'ஸ்பின்னர்களை' சமாளித்தது எப்படி

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் சிறப்பாக செயல்பட்ட கோலி, இலக்கை 'சேஸ்' செய்யும் போட்டிகளில் 'மாஸ்டர்' என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி துபாயில் நடந்தது. இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தொடர்ந்து மூன்றாவது முறையாக (2013, 2017, 2025) பைனலுக்கு (மொத்தம் 5 முறை) முன்னேறியது. பேட்டிங்கில் கைகொடுத்த கோலி, 98 பந்தில் 84 ரன் எடுத்து வெற்றிக்கு உதவினார்.
போட்டிக்கு முன் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரமீஸ் ராஜா கூறுகையில்,''முதலில் பேட்டிங் செய்யும் அணி 170 ரன் எடுக்கும்,'' என்றார். பின், இந்திய பவுலர்கள் சுமார் 100 ரன் அதிகமாக வழங்கி விட்டனர். இந்தியா வெல்வது கடினம் என்றனர். ஆனால் அனுபவ கோலி இருந்ததால் இந்திய ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்தனர்.
சிறப்பான திட்டம்
ரோகித், சுப்மன் அவுட்டானவுடன் களமிறங்கிய கோலி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவசரப்பட்டு, தேவையற்ற முறையில் 'ஷாட்' அடிக்கவில்லை. ஒன்றும், இரண்டுமாக ரன் சேர்த்தார். ஸ்ரேயாசுடன் 3வது விக்கெட்டுக்கு 91 ரன், 4வது விக்கெட்டுக்கு அக்சருடன் 44, 5வது விக்கெட்டுக்கு ராகுலுடன் 47 ரன் என சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து, ரன் சேர்த்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார். கோலி எடுத்த 84 ரன்னில் 4 பவுண்டரி மட்டும் தான் அடிக்கப்பட்டன.
மீண்டது எப்படி
இவர் சதம் அடிக்கவில்லை என்றாலும், சமீபத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக திணறிய சிக்கலில் இருந்து மீண்டு வந்துள்ளார். ஐ.சி.சி., தொடர் 'நாக் அவுட்' போட்டிகளில் இந்தியாவுக்கு நீண்ட காலமாக தொல்லை தந்த ஆஸ்திரேலியாவை வெளியேற்ற இவரது அரைசதம் கைகொடுத்தது.
இது அவ்வளவு எளிதாக வந்துவிடவில்லை. முதல் போட்டியில் வங்கதேசத்தின் ரிஷாத் பந்தில் விரைவில் அவுட்டானார். பின் பாகிஸ்தானுக்கு எதிராக தயாராக, கூடுதலாக இரண்டு மணி நேரம், சுழற்பந்து வீச்சில் பயிற்சி பேட்டிங் பயிற்சி செய்தார். இதனால் அப்ரார் அகமதுவை (பாக்.,) எளிதாக சமாளித்து 100 ரன் எடுத்தார். தொடர்ந்து ஜாம்பாவையும் (ஆஸி.,) சிறப்பாக எதிர்கொண்டு அசத்திய கோலி, மீண்டும் 'சேஸ் மாஸ்டர்' என நிரூபித்தார்.
வெற்றிகரமாக 'சேஸ்' செய்த போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் கோலி, முதலிடத்தில் உள்ளார். இவர் 106 இன்னிங்சில் 5999 ரன் எடுத்துள்ளார். இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும், 15 இன்னிங்சில் 906 ரன் எடுத்தார். இவரது சிறப்பான பேட்டிங் பைனலிலும் தொடர்ந்தால், இந்தியா மீண்டும் கோப்பை வெல்லலாம்.
60 ரன்னுக்கும் அதிகம்
ஒருநாள் அரங்கில் சேஸ் செய்த போட்டிகளில் குறைந்தபட்சம் 1000 ரன்னுக்கும் மேல் 237 வீரர்கள் எடுத்தனர். இதில் கோலியின் சராசரி ரன் குவிப்பு 60க்கும் அதிகம். 70 போட்டிகளில் கோலி 80 அல்லது அதற்கும் மேல் என ரன் எடுத்துள்ளார்.
'நாக் அவுட்' நாயகன்
ஐ.சி.சி., தொடர் 'நாக் அவுட்' போட்டிகளில் கோலி சிறப்பாக செயல்படுகிறார். கடந்த 2013 முதல் பங்கேற்ற, அரையிறுதி (7), பைனல் (4) என, 11 'நாக் அவுட்' போட்டியில் ஒரு சதம் (117, உலக கோப்பை 2023, அரையிறுதி), 9 அரைசதம் அடித்துள்ளார்.
சிறந்த வீரர்
ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில்,'' அணிக்கு என்ன தேவை, அணியை வெற்றிக்கு கொண்டு செல்வது எப்படி என சூழ்நிலையை புரிந்து கொண்டு சிறப்பாக விளையாடினார் கோலி. முக்கிய தொடர்களில், நெருக்கடியான நேரத்தில் தொடர்ந்து அசத்துகிறார். ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அனைத்து காலத்திலும் சிறந்த வீரர் கோலி தான்,'' என்றார்.
மேலும்
-
மதுரை அரசு மருத்துவமனையில் 'தண்ணீராய்' செலவாகுது மக்கள் பணம்; ஓராண்டு செலவு மட்டும் 26 கோடி ரூபாய்!
-
முதல்வர் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டோர் உயிரிழப்பு; தி.மு.க.,வே இழப்பீடு தரவேண்டும்!
-
தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை; 10 மாத்திரை அதிகமாக சாப்பிட்டேன்: சொல்கிறார் பின்னணி பாடகி கல்பனா
-
பாட்டியின் ரூ.80 லட்சம் 'அபேஸ்'; உளறிய பேத்தியால் விபரீதம்
-
கோர்ட்டில் ஆஜராகாத ராகுலுக்கு ரூ.200 அபராதம்; லக்னோ கோர்ட் உத்தரவு
-
மன அழுத்தம் குறைக்கும் பழங்கள்