மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும்; லண்டன் புறப்பட்ட இளையராஜா பேட்டி

6


சென்னை: 'ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை' என சிம்பொனியை அரங்கேற்ற லண்டன் புறப்பட்ட இளையராஜா உறுதி அளித்துள்ளார்.


சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்ட இசைஞானி இளையராஜா சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: எல்லோருக்கும் வணக்கம். இந்த புதிய சிம்பொனியை, உலகிலேயே தலை சிறந்த இசைக்குழுவுடன் இணைந்து லண்டனில் 8ம் தேதி வெளியிட இருக்கிறோம்.



ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை. உலகிலேயே தலைசிறந்த இசை திருவிழாவாக நடைபெற உள்ளது. நல்ல மனதோடு வந்து இருக்கிறீர்கள். உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துகள்.



இசை நிகழ்ச்சி சிறப்பாக நடத்த இறைவனை வேண்டி கொள்ளுங்கள். இது என்னுடைய பெருமை அல்ல. நாட்டின் உடைய பெருமை. இந்தியாவின் பெருமை. INCREDIBLE இந்தியா மாதிரி. நான் INCREDIBLE இளையராஜா. இவ்வாறு அவர் கூறினார்.



உங்களுடைய பெருமை...!


அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நிருபர்களுக்கு இளையராஜா, 'அனாவசியமான கேள்விகளை என்னிடம் கேட்க கூடாது. நான் என்னுடைய வேலையில் மட்டும் தான் கவனம் செலுத்துகிறேன். நீங்கள் எல்லாம் சேர்ந்து தான் நான்.


உங்களுடைய பெருமையை தான் அங்க போய் நடத்த போகிறேன். எல்லோருக்கும் வாழ்த்துகள். இறைவன் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்' என தெரிவித்தார்.

Advertisement