கொள்ளை அடிக்க பயிற்சியளித்த தலைமை ஏட்டு

சிக்கபல்லாபூர்:வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிக்க பயிற்சி அளித்த, போக்குவரத்து தலைமை ஏட்டு கைது செய்யப்பட்டார்.
சிக்கபல்லாபூரில் தொடர்ந்து வீடு புகுந்து கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நடந்து வந்தன.
பிப்., 20ல், கவுரிபிதனுாரில் சீனிவாஸ் என்பவரின் வீட்டிற்கு புகுந்து, தங்க நகைகள், வைரங்களை மர்ம கும்பல் கொள்ளை அடித்துச் சென்றது.
விசாரணை நடத்திய கவுரிபிதனுார் போலீசார், ரவுடி தன்வீர், சபீர், பைரோஸ், பஷீர் அகமது, இர்பான் பாஷா, பாபாஜான், அமின் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், வீடுகளில் புகுந்து கொள்ளை அடிக்க, ஹென்னுார் போக்குவரத்து போலீஸ் தலைமை ஏட்டு இலியாஸ் பயிற்சி அளித்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, இலியாசையும் கைது செய்தனர்.
கொள்ளையர்களுக்கு போலீசே பயிற்சி அளித்தது, போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும்; லண்டன் புறப்பட்ட இளைய ராஜா பேட்டி
-
தூத்துக்குடி இரட்டைக் கொலை வழக்கு: எஸ்.ஐ.,யை தாக்கி விட்டு தப்பியவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்
-
மதுரை அரசு மருத்துவமனையில் 'தண்ணீராய்' செலவாகுது மக்கள் பணம்; ஓராண்டு செலவு மட்டும் 26 கோடி ரூபாய்!
-
முதல்வர் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டோர் உயிரிழப்பு; தி.மு.க.,வே இழப்பீடு தரவேண்டும்!
-
தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை; 10 மாத்திரை அதிகமாக சாப்பிட்டேன்: சொல்கிறார் பின்னணி பாடகி கல்பனா
-
பாட்டியின் ரூ.80 லட்சம் 'அபேஸ்'; உளறிய பேத்தியால் விபரீதம்
Advertisement
Advertisement