பெண்களுடன் சேர்ந்து காதலியை கொன்று உடலை வீசிய மாணவன் உட்பட மூவர் கைது

சேலம்:திருச்சி மாவட்டம், துறையூர், விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் அல்பியா, 32, என்ற பெண், சேலத்தில் தனியார் விடுதியில் தங்கி, தனியார் பயிற்சி மையத்தில் ஆசிரியர் தேர்வுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுத்து வந்தார்.
கடந்த நான்கு நாட்களாக இவரை காணவில்லை. விடுதி காப்பாளர் புகாரின்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரித்தனர். அதில், திருச்சியைச் சேர்ந்த ஒருவரிடம் கடைசியாக அவர் மொபைல் போனில் பேசியது தெரிந்தது.
அவர், பெரம்பலுாரைச் சேர்ந்த அப்துல் ஹபீஸ், 22, பொறியியல் கல்லுாரி நான்காமாண்டு மாணவர் என்பது தெரிந்தது.
அவர், அல்பியாவை கொன்று, ஏற்காடு மலையில் 60 அடி பாலம் அருகே மலைப்பாதை பள்ளத்தில் வீசியதாக கூறவே, பள்ளப்பட்டி, ஏற்காடு போலீசார் இணைந்து தேடினர். இதில், அழுகிய நிலையில் கிடந்த அந்த பெண்ணின் உடலை நேற்று மீட்டனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
அல்பியா, அப்துல் ஹபீஸ் நான்காண்டுகளாக காதலித்தனர். அல்பியாவுக்கு சேலத்தில் வேலை கிடைக்க, 2023ல் இங்கு வந்தார். அதன் பிறகும் அப்துல் ஹபீஸ் அடிக்கடி சேலம் வந்து, அல்பியாவுடன் பழக்கத்தை தொடர்ந்தார்.
இந்நிலையில், சென்னை ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும் காவியா சுல்தானா, 22, என்பவருடன் அப்துல் ஹபீஸ் பழகினார். இதையறிந்த அல்பியா தகராறு செய்து, தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்.
இதில் ஆத்திரமடைந்த அப்துல் ஹபீஸ், அல்பியாவை கொல்ல திட்டமிட்டு, காவியா சுல்தானா மற்றும் முன்னாள் காதலியான விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மாணவி மோனிஷா, 22, ஆகியோரிடம் கூறினார்.
இதையடுத்து, மூவரும் கடந்த 1ம் தேதி அல்பியா உடன் வாடகை காரில் ஏற்காடு சென்றனர். இரு பெண்களையும் தன் 'தோழியர்' என, அல்பியாவிடம் அப்துல் ஹபீஸ் அறிமுகம் செய்தார்.
ஏற்காடு, 60 அடி பாலம் அருகே சென்ற நிலையில், அப்துல் ஹபீசும், காவியா சுல்தானாவும் சேர்ந்து, அல்பியாவை பிடித்துக் கொண்டனர்.
மருந்தில்லாத வெறும் சிரிஞ்சை அல்பியா உடலில் மோனிஷா செலுத்தினார்.
இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தவரை, பள்ளத்தில் துாக்கி வீசிவிட்டு மூன்று பேரும் காரில் சென்று விட்டனர். தற்போது மூவரையும் கைது செய்துள்ளோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.

மேலும்
-
மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும்; லண்டன் புறப்பட்ட இளைய ராஜா பேட்டி
-
தூத்துக்குடி இரட்டைக் கொலை வழக்கு: எஸ்.ஐ.,யை தாக்கி விட்டு தப்பியவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்
-
மதுரை அரசு மருத்துவமனையில் 'தண்ணீராய்' செலவாகுது மக்கள் பணம்; ஓராண்டு செலவு மட்டும் 26 கோடி ரூபாய்!
-
முதல்வர் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டோர் உயிரிழப்பு; தி.மு.க.,வே இழப்பீடு தரவேண்டும்!
-
தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை; 10 மாத்திரை அதிகமாக சாப்பிட்டேன்: சொல்கிறார் பின்னணி பாடகி கல்பனா
-
பாட்டியின் ரூ.80 லட்சம் 'அபேஸ்'; உளறிய பேத்தியால் விபரீதம்